தாய்லாந்தில் ஓவியங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் வரவேற்பை பெற்றுள்ளன

0 841

தாய்லாந்தில் திரை கதாபாத்திரங்களின் ஓவியங்கள் அச்சிடப்பட்ட முகக்கவசங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. அந்நாட்டில் கடந்த சில நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்போ உயிரிழப்போ ஏற்படாத நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாங்காக்கைச் சேர்ந்த மெய்சா டேலார்ட் என்பவர், ஸ்டார் வார்ஸ், அனுமான் உள்ளிட்ட திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களின் ஓவியங்களை முகக்கவசங்களில் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது.

பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் அதே சமயம் நோய் பரவலை தடுக்கும் வகையிலும் முகக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளதால், விற்பனை அதிகரித்துள்ளதாக மெய்சா டேலார்ட் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments