லெபனான் பவுண்ட் கரன்சியின் மதிப்பு வீழ்ச்சி: நாட்டின் பல இடங்களில் போராட்டம்

0 855

மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லெபனானில் பவுண்ட் கரன்சி மதிப்பின் கடும் வீழ்ச்சியை கண்டித்து பல இடங்களில் நடந்த போராட்டத்தில் கலவரம் மூண்டது.

1975 முதல் 1990 வரை நடந்த உள்நாட்டு போரால் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் லெபனானில், ஒரு டாலருக்கான மதிப்பு 5 ஆயிரம் பவுண்ட் ஆக சரிந்தது.

மேலும், லெபனான் பவுண்ட் அதன் மதிப்பில் 70 சதவீதம் வரை இழந்ததைக் கண்டித்து, வடக்கு நகரமான திரிப்போலி முதல் தெற்கு நகரமான சீடோன் வரை போராட்டங்கள் நடைபெற்றன.

கொரோனா ஊரடங்குக்கு இடையே நடந்த ஆர்ப்பாட்டங்கள், பல இடங்களில் வன்முறையாக மாறியது. பெய்ரூட், திரிப்போலி உள்ளிட்ட இடங்களில் கற்களை எறிந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர். இதில், வங்கிக் கட்டிடம் ஒன்றும் தீக்கிரையானது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments