மேலும் 10,956 பேருக்கு கொரோனா.. 2.97 லட்சத்தை தாண்டியது பாதிப்பு..!

0 2521

நாடு முழுவதும் மேலும் 10 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் குறித்த புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணையதள பக்கத்தில் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 10 ஆயிரத்து 956 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 396 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவியது முதல் இதுவே மிகவும் அதிகபட்ச பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகும்.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரத்து 535ஆகவும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 498ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 1 லட்சத்து 41 ஆயிரத்து 842 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், மருத்துவ சிகிச்சையில் இதுவரை 1 லட்சத்து 47 ஆயிரத்து 195 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பும் 3 ஆயிரத்து 590ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தையும், டெல்லியில் 34 ஆயிரத்தையும், குஜராத்தில் 22 ஆயிரத்தையும், மேற்குவங்கத்தில் 12 ஆயிரத்தையும், ராஜஸ்தானில் 11 ஆயிரத்தையும் கடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் 10 ஆயிரத்தை (9768) நெருங்கியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments