7 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா பரவல்..!

0 1774

கடந்த 10 நாள்களில் இந்தியாவின் 7 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்திருப்பது புள்ளி விவரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. நாட்டின் கொரோனா பரவல் குறித்து நாள்தோறும் மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளி விவரம் வெளியிட்டு வருகிறது.

அதில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ஹரியானா, மேற்குவங்கம், ஜம்மு காஷ்மீர், உத்தர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில்
கடந்த 10 நாள்களாக கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது.

டெல்லியில் நாள்தோறும் புதிதாக 1,300 பாதிப்பும், மகாராஷ்டிராவில் நாள்தோறும் 2 ஆயிரத்துக்கு அதிகமாகவும், தமிழகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமாகவும் பதிவாகியுள்ளது.

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் ஆகியவற்றில் 10 நாள்களுக்கு முன்பிருந்ததைவிட 3 மடங்கு அதிக எண்ணிக்கையில் புதிய பாதிப்பு பதிவாகியது. இதேபோல் உத்தர பிரதேசத்திலும் கணிசமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து, நாட்டிலேயே மிகவும் அதிகம் பாதித்த 5ஆவது மாநிலமாக உருவெடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments