மகாராஷ்டிராவில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா

0 654

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், அமைச்சருமான அசோக் சவாண், அமைச்சர் ஜிதேந்திர அவாத் ஆகியோருக்கு முதலில் கொரோனா உறுதியாகியிருந்தது. அவர்கள் 2 பேரும் மருத்துவ சிகிச்சையில் முழுவதும் குணமாகினர்.

இந்நிலையில், கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் ஒருவருக்கும் புதிதாக கொரோனா உறுதியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது உதவியாளர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதில் உதவியாளர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அமைச்சரும், உதவியாளர்கள் 5 பேரும் தனிமைபடுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments