இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதல்... எல்லைக்கு அப்பால் பாகிஸ்தான் ராணுவ முகாம்களில் பலத்த சேதம்!

0 16417

ந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்... எல்லைக்கு அப்பால் பாகிஸ்தான் ராணுவ முகாம்களில் பலத்த சேதம்!

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தானால் அத்து மீறி நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் இறந்ததை அடுத்து இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ முகாம்களில் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்தியா - பாகிஸ்தான் எல்லைக்கோட்டுப் பகுதியில், காஷ்மீரின் ராஜோரி பகுதியில் கடந்த சில நாள்களாகவே பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் வகை ஏவுகணைத் தாக்குதலை நிகழ்த்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன; விலங்குகள் பல கொல்லப்பட்டன. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து தீவிரவாதிகளை காஷ்மீர் பகுதிக்குள் அனுப்பி வைக்க பாகிஸ்தான் இதுமாதிரியான தாக்குதலை நடத்துவது வழக்கம்.

நேற்று நடந்த தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து, பதிலடியாக இந்தியாவும் தற்போது துல்லியத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அதிரடித் தாக்குதலில் எல்லைக்கு அப்பால் பாகிஸ்தான் ராணுவ முகாம்களில் கடுமையான சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட ராணுவ முகாம்கள் அழைக்கப்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இறப்பு குறித்து எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments