இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

0 2073

இலங்கையில்  இந்திய கிரிக்கெட் அணி மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் இருந்து அடுத்த மாதம் வரை இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி விளையாட இருந்தது.

இந்நிலையில், அந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கொரோனா நிலவரம் காரணமாக  சுற்றுப்பயணம் செய்ய இயலாத நிலையில் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்து விட்டதாகவும், ஆதலால் சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியமும் இதை உறுதி செய்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments