20 மாத கர்ப்பிணி யானை உள்பட மூன்று நாள்களில் மூன்று யானைகள் பலியான பரிதாபம் - சத்தீஸ்கரில் தொடரும் சோகம்!

0 3191

கேரளாவில் இறந்து போன கர்ப்பிணி யானையின் சோகம் கூட இன்னும் மனதை விட்டு அகலவில்லை. அதற்குள் சத்தீஸ்கரில் 20 மாத கர்ப்பிணி யானை உள்பட மூன்று யானைகள் அடுத்தடுத்து இறந்து போன சம்பவம் விலங்கியல் ஆர்வலர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில், செவ்வாய்க் கிழமையன்று சுராஜ்பூர் மாவட்ட வனப்பகுதியில் மர்மமான முறையில் 20 மாத கர்ப்பிணி யானை ஒன்று பரிதாபமாக இறந்து கிடந்தைப் பார்த்த உள்ளூர் வாசிகள் வனச்சரக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார்கள். அவர்கள் வந்து பார்த்த பொது அங்கிருந்து 300 மீட்டர் தொலைவில் மற்றொரு யானை ஒன்றும் இறந்து கிடந்தது. இறந்து போன யானைகளைச் சுற்றிலும் நான்கு மணி நேரத்துக்கும் மேலாக யானை மந்தை சுற்றி வந்தது பார்ப்போரை வேதனையடையச் செய்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்திருக்கிறார்கள். 
image
இந்த சம்பவம் குறித்து, வனச்சரக அதிகாரி அருண் பாண்டே என்பவர் கூறுகையில், "செவ்வாய் அன்று அதிகாலை ஐந்து மணிக்குக் கர்ப்பிணி யானை மந்தையிலிருந்து பிரிந்து இறந்து கிடந்தது. யானை நல்ல உடல் நலத்துடன் தான் இருக்கிறது. அதன் இறப்பு இயற்கையாக இருக்க வாய்ப்பில்லை. முதல் கட்ட விசாரணையில் விஷம் வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்  என்று சந்தேகிக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார். 

"இறந்து போன யானை ஒன்றின் உடலை ஆய்வு செய்ததில் அதன் கல்லீரலில் நீர்க் கட்டிகள் இருந்ததைக் கண்டுபிடித்திருக்கிறோம். நீர்க்கட்டி தான் யானையின் இறப்புக்குக் காரணமா என்று ஆய்வு செய்து வருகிறோம். இப்போது உறுதியாக எதையும் கூற முடியாது" என்று இறந்து போன யானையின் உடலை ஆய்வு செய்த மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். 

image

இரண்டு யானைகள் அடுத்தடுத்து இறந்த சுவடு மறைவதற்குள் மூன்றாவதாக பலராம்பூர் மாவட்டத்தில் இறந்து போன யானை ஒன்றின் உடலைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், அதிகாரிகள். அந்த யானையின் உடலை ஆய்வு செய்த அதிகாரிகள் இறப்பிற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள தண்ணீர், யானையின் சாணம் ஆகியவற்றைச் சேகரித்து ஆய்வுக் கூடத்துக்குச் சோதனை செய்ய அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.  

சமீப காலத்தில் சட்டீஸ்கரில் யானை - மனித மோதல் அதிகமாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக யானைகள் விஷம் வைத்துக் கொல்லப்படுகிறதா என்று அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். சமீப காலத்தில் சட்டீஸ்கரில் யானை - மனித மோதல் அதிகமாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2017 - 2018 - ல் 74 பேரும்; 2018 - 2019 ல் 56 பேரும் யானைகளால் தாக்கி கொல்லப்பட்டிருக்கிறார்கள். யானை - மனித மோதல் காரணமாக யானைகள் விஷம் வைத்துக் கொல்லப்படுகிறதா என்று அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments