சமையல் சிலிண்டர் பதிவு செய்வது மேலும் சுலபமாகிறது

0 30750

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஊரடங்கு காரணமாக வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு வாட்ஸ்-ஆப் மூலம் சிலிண்டர் பதிவு செய்யவும், டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தவும் பாரத் பெட்ரோலியல் சார்பில் பிரத்யேக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது பதிவு செய்த தொலைபேசி எண்ணில் இருந்து 1800 22 4344 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி புதிய சிலிண்டரை பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும், பாரத் நிறுவனத்தின் webLink  மூலம் வாடிக்கையாளர்கள் சிலிண்டருக்கான பணத்தை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வீடு வீடாக சமையல் சிலிண்டர் விநியோகிக்கும் போது, கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி விநியோகம் செய்யப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments