கர்நாடகத்தில் 7ஆம் வகுப்பு வரை இணைய வழியில் பாடம் கற்பிக்கத் தடை

0 2166

ஏழாம் வகுப்பு வரை இணையம் வழியாகப் பாடம் கற்பிக்கக் கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஒருசில பள்ளிகளில் இணையம் வழியாக மாணவர்களுக்குப் பாடம் கற்பித்து வருகின்றனர்.

இதற்காகக் கட்டணமும் பெற்று வருகின்றனர். கர்நாடகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை இணையம் வழியாகப் பாடம் கற்பிக்கத் தடை விதிக்கப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் வியாழனன்று அறிவித்தார்.

இந்நிலையில் வெள்ளியன்று நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், ஊர்ப்புற மாணவர்களுக்கு இணையம் வழியாகப் பாடம் கற்பது சவாலாக உள்ளதால் அதைத் தடை செய்ய வேண்டும் என அமைச்சர்கள் பலரும் வலியுறுத்தினர். இதை ஏற்று ஏழாம் வகுப்பு வரை இணையம் வழியாகப் பாடம் கற்பிக்க மாநில அரசு தடை விதித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments