தமிழகத்தில் கொரோனா வைரஸின் தன்மை மாறியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது - விஜயபாஸ்கர் தகவல்

0 17468

கொரோனா வைரசின் வீரியம் சற்று கூடியதால் மக்கள் பாதுகாப்பாக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். 

கோவையில் சிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், முன்பு இருந்ததை விட தற்போது கொரோனா வைரசின் வீரியம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளதாக கூறினார். 

அறிகுறி இல்லாமல் கொரோனா உறுதியானவர்களிடம் இருந்து கூட நோய்த் தொற்று பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அறிகுறியுடன் கொரோனா நோய் தாக்கியவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மருத்துவர்கள் ஆலோசனைப்படி வீட்டில் தனிமை படுத்துக் கொள்பவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் என்ற கருவியை கொடுப்பதற்கான ஆலோசனையில் அரசு இருப்பதாகவும், அதற்காக 20,000 பல்ஸ் ஆக்ஸி மீட்டரை வாங்கி இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னையிலிருந்து நோயாளிகளை கோவைக்கு மாற்றுவதாக விஷமத்தனமான வதந்திகள் பரப்பப்பட்டு வருவது மிகுந்த கண்டனத்துக்குரியது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments