சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

0 2277

மாதாந்திர பூஜைக்காக வரும் 14-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்படும் போது பக்தர்களை அனுமதிக்கப்போவதில்லை என தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.

சபரிமலை கோவில் நடை வரும் 14-ந் தேதி திறக்கப்படும்போது பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என கோவில்  நிர்வாகம் நேற்று தெரிவித்திருந்தது. கோவில் தந்திரிக்கு அதில் உடன்பாடு இல்லாததால் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தேவசம்போர்டு தலைவர் வாசு, சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மோகனரு ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சுரேந்திரன், 14ம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்போது பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படாது என்றார். கொரோனா அச்சுறுத்தலால் சபரிமலை கோயில் திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments