ரஷ்யாவில் ஒரே நாளில் 8,779 பேருக்கு புதிதாக தொற்று

0 592

ரஷ்யாவில் ஒரே நாளில் 8,779 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,02,436 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யாவில் தினசரி தொற்று எண்ணிக்கை ஒன்பதாயிரமாக உள்ளது.

24 மணி நேரத்தில் 174 பேர் கொரோனாவுக்கு பலியானதால், இறப்பு எண்ணிக்கையும் 6,532 ஆக உயர்ந்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக தொற்று பாதித்தோர் எண்ணிக்கையில் ரஷ்யா மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments