இஸ்ரோவின் ஆளில்லா விண்கலம் அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு

0 945

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட இருந்த ககன்யான் திட்டத்திற்கு, முன்னோட்டமாக இந்த ஆண்டுக்குள் ஆளில்லாத விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதனை செய்ய திட்டமிடப்பட்டது. அதில் ஒரு ரோபோவும் அனுப்பி வைக்கப்பட இருந்தது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக ககன்யான் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆளில்லா விண்கலம் அனுப்பும் திட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இந்த ஆண்டு தொடக்கம் அல்லது இறுதியில் செயல்படுத்துவதாக இருந்த சந்திரயான்-3 திட்டமும் 6 மாத காலத்திற்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments