புதுச்சேரியில் கொரோனாவுக்கு முதல் பலி

0 1175

புதுச்சேரியில் 82 வயது முதியவர், கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார்.

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், இது வரை 67 பேர் குணம் பெற்று வீடு திரும்பி உள்ளதாகவும் 88 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியை தற்காலிக முகவரியாக கொடுத்திருந்த நோயாளி நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், புதுச்சேரி சேர்ந்த முதியவர் கொரோனாவுக்கு முதல் பலியாகி உள்ளதாகவும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments