சிக்கலைத் திருப்புமுனையாக்குவோம் - பிரதமர் மோடி வேண்டுகோள்

0 1441

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட சிக்கலை நாட்டுக்கான திருப்பு முனையாக மாற்ற வேண்டும் எனத் தொழில்துறையினரைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். 

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் அமைப்பின் 95ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் உரையாற்றினார். அப்போது, கொரோனாவுக்கு எதிராகப் போராடும் இந்தியா, புயல், வெள்ளம், வெட்டுக்கிளிப் படையெடுப்பு, எரிவாயுக் கிணறு தீவிபத்து ஆகிவற்றையும் எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்தச் சிக்கலை ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இதை நாட்டுக்கு ஒரு திருப்புமுனையாக மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தற்சார்புள்ளதாக நாட்டை மாற்றுவதே அந்தத் திருப்புமுனை எனவும் தெரிவித்தார். உள்நாட்டுப் பொருட்களைப் பயன்படுத்துவதுடன், வெளிநாடுகளில் இந்தியப் பொருட்களுக்கான சந்தையை உருவாக்க வேண்டும் என விவேகானந்தர் முன்பே எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். விவேகானந்தர் காட்டிய பாதை கொரோனாவுக்குப் பின்னர் இந்தியாவுக்குத் தூண்டுதலாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டு நிலையில் இருந்து செயல்பாட்டு நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். துணிச்சலுடன் முடிவெடுப்பதற்கும், துணிச்சலாக முதலீடு செய்வதற்குமான நேரம் இது எனத் தெரிவித்தார். உலக அளவில் போட்டியிடக் கூடிய உள்நாட்டு சப்ளை செயினை உருவாக்க வேண்டிய நேரமிது எனத் தெரிவித்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments