7 தமிழர்கள் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும்-ராமதாஸ்

0 1104

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரட்டை ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைத்து ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தமிழக அமைச்சரவையின் தீர்மானம் 1,007 நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

30 ஆவது ஆண்டாக சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு தமிழர்களும், வாழ்நாளின் பெரும்பகுதியை இழந்து விட்டனர் என்றும், இனி வரும் காலங்களிலாவது அவர்கள் தங்கள் வாழ்நாளை குடும்பத்தினருடன் கழிக்க வேண்டும் என்பதை உணர்ந்து 7 பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்கவும், தமிழக அரசு ஆளுநருக்கு உரிய அழுத்தம் கொடுக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments