NANO MASK எனப்படும் புதிய நுட்பத்தில் முகக்கவசம் கண்டுப்பிடிப்பு

0 1821

கொரோனா நோயாளிகளுக்கு தேவையான வென்டிலேட்டரின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய முககவசத்தை மதுரையை சேர்ந்த இயற்பியல் பேராசிரியர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

nano mask எனப்படும் இந்த முகக்கவசமானது சுற்றுப்புற காற்றிலுள்ள ஆக்சிஜன் அளவை மின்காந்தவியல் முறையில் அதிகரிக்க வழிவகை செய்வதுடன், மாஸ்க் அணிபவர், சுவாசித்த காற்றையே மீண்டும் சுவாசிக்காமல் தவிர்த்து பாதுகாக்கிறது.

இந்த புதிய தொழில்நுட்பத்தினால் ஆன முககவசம் கொரோனா நோய் கிருமிகள் தொற்றில் இருந்து பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் மூச்சுத்திணறல் துவக்கநிலையில் உள்ள நோயாளிகளுக்கு வென்டிலேட்டர் உதவியின்றி சுவாசத்தை சீராக்கவும், அவசர பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவையை குறைப்பதோடு சுவாசத்தை சீராக்கவும் உதவும் என பேராசிரியர்கள் ஆரோக்கியதாஸ், அசோக்குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments