சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 360ஆக அதிகரிப்பு

0 4215

கொரோனா பாதிப்பினால் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 360 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

குறிப்பிட்ட ஏதேனும் ஒரு தெருவில் அல்லது பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தொற்று உறுதியானால் அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்டு அடைக்கப்படுகிறது. இவ்வாறாக சென்னையில் தற்போது 360 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதிலும், அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 78 பகுதிகளும் , கோடம்பாக்கம் மண்டலத்தில் 73 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நாள்தோறும் கிருமிநாசினி கொண்டு தூய்மை செய்யும் சென்னை மாநகராட்சி, இந்த பகுதியில் வசிப்பவர்கள் வெளியே வரக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments