சொகுசு காரை வாங்கிச் சென்ற பின் திருப்பிக் கொடுத்ததாக அட்டிகா ஜூவல்லரி உரிமையாளருக்கு சம்மன்

0 29937

சென்னையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புடைய மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கிச் சென்று 3 மாதம் பயன்படுத்திய பின் திருப்பிக் கொடுத்து விட்டு பணத்தை கேட்பதாக  தொழிலதிபர் ஒருவர் கொடுத்தப் புகாரில், அட்டிகா ஜூவல்லரி உரிமையாளருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சென்னை எழும்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் நிஜாமுதீன் என்பவர் அளித்த புகாரில், அட்டிகா ஜூவல்லரி உரிமையாளரான பொம்மனஹள்ளி பாபு 45 லட்சம் ரூபாய் கொடுத்து தனது பென்ஸ் காரை வாங்கிச் சென்றதாகவும், மூன்று மாதம் பயன்படுத்தியப் பிறகு காரை திருப்பிக் கொடுத்துவிட்டு பணத்தை கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்தி வரும் எழும்பூர் குற்றப் பிரிவு போலீசார், வரும் 16-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களூரில் உள்ள பொம்மனஹள்ளி பாபுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments