திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் அனுமதி

0 14013

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அனைத்து பக்தர்களுக்கும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் ஏழுமலையான் கோயில் நடை சுமார் 3 மாதங்களாக மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

5ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின்போது சில கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதித்தது. இதையடுத்து ஏழுமலையான் கோயிலில் 8,9, 10ம் தேதிகளில் உள்ளூர் பக்தர்களுக்கும், ஊழியர்களுக்கும் மட்டும் சோதனை முறையில் அனுமதியளிக்கப்பட்டது.

நாளை முதல் அனைத்து பக்தர்களும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆன்லைனில் 300 ரூபாய் டிக்கெட்டுகள் 3 ஆயிரம் விடுவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் கெஸ்ட் ஹவுஸ்களில் உள்ள கவுண்டர்களில் 3 ஆயிரம் இலவச டோக்கன்களை வழங்கபடுகிறது. அந்த டோக்கன்கனை வாங்க கவுண்டர்களில் இன்று கூட்டம் அலைமோதியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments