பருப்பு, காய்கறி கலந்த சோறு... டைனிங் டேபிளில் சாப்பாடு ... குழந்தையாக மாறிய குரங்கு!

0 8960

சமீப காலமாக விலங்குகளுக்கு மனிதர்கள்  இழைக்கும் கொடுமைகளையே பார்த்து வந்தோம். கேரளாவில் யானை கொலை, நாயின் வாயில் டேப் ஒட்டியது, அஸ்ஸாம் மாநிலத்தில் சிறுத்தை கொலை, ஹிமாச்சல் பிரதேசத்தில் பசுவுக்கு உணவில் வெடி மருந்து கலந்து கொடுத்தது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை அளித்தன.

மனிதர்களிடத்தில் மனிதாபிமானம் மரித்து போய் விட்டதா என்கிற கேள்வியும் எழும்பியது. ஆனால், மனிதர்கள் அத்தனை பேரும் கொடுமைக்காரர்கள் இல்லை. விலங்குகளிடத்தில் அன்பு செலுத்தும் நல்ல மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக மேற்குவங்கத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிர்ஹாம் மாவட்டத்தில் மயூரேஸ்வர் என்ற இடத்தில் சந்த்தாஸ் என்பவர் வீடியோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் அப்லோட் செய்துள்ளார். பெண் ஒருவர் லங்கூர் குரங்குக்கு உணவு ஊட்டி விடும் வீடியோ அது. தட்டில் சோறு, பருப்பு , காய்கறி கலந்து அந்த பெண் உணவு ஊட்டி விட, டைனிங் டேபிளில் அமர்ந்து குரங்கு அழகாக சாப்பிடுகிறது. சோத்து பருக்கையுடன்  பருப்பு , காய்கறியுடன் கலந்து உருண்டை பிடித்து அந்த பெண் கொடுக்க குரங்கு குழந்தை போல அமைதியாக சாப்பிடுகிறது. இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 15,000 முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது . வீடியோவை பார்த்த பலரும் மனிதர்களிடத்தில் இன்னும் மனிதாபிமானம் இருப்பதை இந்த வீடியோ உணர்த்துவதாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

சமீபத்தில் , கார்நாடக மாநிலத்தில் காயமடைந்த லங்கூர் குரங்கு ஒன்று மருத்துவமனைக்கு தானே சென்று சிகிச்சை பெற்றது. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. அந்த லங்கூர் குரங்கின் புத்தி கூர்மையை பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments