தாம் வளர்க்கும் 2 யானைகளுக்கு ரூ.5 கோடி மதிப்பு சொத்துகளை உயில் எழுதிய நபர்

0 1600

பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ஒரு நபர் தாம் வளர்க்கும் 2 யானைகளுக்கு 5 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை உயில் எழுதி வைத்துள்ளார்.

ஆசிய யானை மறுவாழ்வு மற்றும் வனவிலங்கு விலங்கு அறக்கட்டளை எனும் ( Asian Elephant Rehabilitation and Wildlife Animal Trust ) அமைப்பின் தலைமை மேலாளராக இருக்கும் அவரின் பெயர் அக்தர் இமாம் ஆகும்.

வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்து கிரிமினல் ஒருவர் தாக்க வந்தபோது, யானை கூச்சலிட்டதால் சுதாரித்து எழுந்து உயிர் தப்பினார். 12 வயதிலிருந்து யானை வளர்ப்பில் ஈடுபட்ட போதிலும், இச்சம்பவத்துக்கு பிறகு அதன் மீது மேலும் பாசம் அதிகரித்தது.

இத்தகைய காரணத்தினால் தனக்கு பிறகு யானைகள் கவனிப்பாரின்றி கஷ்டபடக்கூடாது என கருதி, 10 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளில் ஒரு பாதியை மனைவிக்கும், மீதியை 2 யானைகளுக்கும் அக்தர் இமாம் உயில் எழுதி வைத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments