பிரதமர் முதல் ராஜ்யசபா எம்.பி வரை... வயதானாலும் வற்றாத பதவி ஆசையில் தேவேகௌடா!

0 5577

முன்னாள் பிரதமர் தேவே கௌடாவுக்கு தற்போது 87 வயதாகிறது. ஆனால், இந்த வயதிலும் ராஜ்யசபா எம்.பி பதவிக்காக போராடி வருவதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. கர்நாடகத்தில் 4 ராஜ்யசபா எம்.பி பதவிகள் காலியாக இருக்கின்றன. சட்டமன்றத்தில் பாரதிய ஜனதாவுக்கு 117 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 68 எம்.எல்.ஏக்களும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 34 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த பொதுத்தேர்தலில் கல்புர்கி தொகுதியில், தோல்வியடைந்த மல்லிகார்ஜுன கார்கே நிறுத்தப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் எர்ரனா கராடி, அசோக் கஸ்தி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த கேப்பில் தேவேகௌடாவும் ராஜ்யசபா எம்.பி பதவிக்கு ஜூன் 5- ந் தேதி மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாரதிய ஜனதா, மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மூத்தத் தலைவரான தம்மை ஆதரிக்கும் என்று தேவகௌடா நம்புகிறார். கர்நாடகத்தில் பலம் பொருந்திய ஒக்கலிக்கர்  சமுதாயத்தை சேர்ந்தவர் தேவே கௌடா. அதனால், எப்படியும் தேசிய கட்சிகள் தன்னை ஆதரித்துவிடும் என்பது அவரின் நம்பிக்கை

இந்த வயதிலும் ராஜ்யசபா எம்.பிக்கு போட்டியிடுவது குறித்து தேவேகௌடா கூறுகையில், '' மதசார்பற்ற ஜனதா தள பொதுக்குழுக் கூட்டத்தில் என்னை வேட்பாளராக தேர்வு செய்துவிட்டனர். இதனால்தான் நான் வேட்புமனுத்தாக்கல் செய்தேன். ஆனாலும், எந்த கட்சியிடமும் நான் ஆதரவு கேட்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன், கடந்த 1996- ம் ஆண்டு இந்தியாவின் 11- வது பிரதமராக தேவேகௌடா பதவியேற்ற போது, ராஜ்சபா எம்.பியாக இருந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments