12ம் வகுப்பு மறுதேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும்: தமிழக அரசு

0 1070

10ம் வகுப்பு பொதுத் தேர்வு, 11ம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது.  அந்த அறிவிப்பு தொடர்பான அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் நிலவரம் குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்து, வல்லுநர்கள் கொரோனா பரவல் குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை எனத் தெரிவித்திருப்பதையும், பெற்றோரின் கோரிக்கை, நோய் தொற்றின் தற்போதைய போக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டும், தேர்வுகள் ரத்து செய்து ஆணையிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால், அதை எழுதாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments