தொழிலாளர்கள் திரும்பி வந்தபின் 6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்

0 4585

உத்தரப்பிரதேசம் பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட 6 மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்பி வந்தபின் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஒடிசா, அசாம் மாநிலங்களில் இருந்து பிற மாநிலங்களுக்குப் பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதி முதல் சிறப்பு ரயில்களில் சொந்த மாநிலத்துக்குத் திரும்பினர். இதனால் அந்த மாநிலங்களில் கடந்த சில வாரங்களாகக் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மே ஒன்றில் இருந்ததைவிட இப்போது எட்டு மடங்கு அதிகரித்துள்ளதாகப் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. மே ஒன்றாம் தேதி நிலவரப்படி இந்த 6 மாநிலங்களும் சேர்ந்து நாட்டின் ஒட்டுமொத்தக் கொரோனா நோயாளிகளில் பத்தரை விழுக்காட்டைக் கொண்டிருந்தன. ஜூன் எட்டாம் தேதி நிலவரப்படி இது 12 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments