'அது அவங்க அம்மாகிட்ட போகட்டும்! '- தோனி வீட்டில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

0 6887
திட்டுவான் குருவி பறவையுடன் தோனி

கொரோனா லாக்டௌன் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் தோனி வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார். அவ்வப்போது, தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை சமூகவலை தளங்களில் தோனி அவரின் மகள் ஷிவா ஆகியோர் வெளியிடுவது வழக்கம். நேற்று ஷிவா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகியுள்ளது. 

தோனியின் பங்களாவில் உள்ள புல்வெளியில் பறவை ஒன்று நேற்று மயங்கி விழுந்து கிடந்துள்ளது. தோனியின் மகள் ஷிவா அதை  பார்த்துள்ளார். உடனடியாக, தந்தை தோனி மற்றும் தாயார் சாக்ஷியை பறவை விழுந்து கிடந்த இடத்துக்கு  அழைத்து வந்துள்ளார்.  மயங்கி கிடந்த பறவையின் முகத்தில் தண்ணீர் தெளித்து, வாயில் மூச்சு காற்றை செலுத்தி அதன் மயக்கத்தை தெளிய வைக்க தோனி முயன்றார். சில நிமிடங்களில் அந்த பறவை மயக்கம் தொளிந்து கண் விழித்து, சகஜ நிலைக்கு திரும்பியது . இதனால், தோனி குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது.

இந்த சம்பவம் குறித்து ஷிவா தன் இஸ்டாகிராம் பக்கத்தில் பறவையின் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், '' அந்த பறவை கண் விழித்ததும் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது திட்டுவான் குருவி (Coppersmith barbet)என்று அம்மா என்னிடத்தில் சொன்னார். நாங்கள் ஒரு பக்கெட்டுக்குள் இலை தழைகளை போட்டு பறவையை வைத்திருந்தோம். அந்த குட்டிப்பறவை மிக அழகாக இருந்தது. ஆனால், சட்டென்று பறந்து போய் விட்டது. என்னுடனே அந்த பறவை இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்பட்டேன். ஆனால், பறந்து போனதால் வருத்தமாகி விட்டது. அப்போது, 'அவங்க அம்மாகிட்ட அந்த பறவை போயிருக்கும்' என்று என் அம்மா என்னிடத்தில் சொன்னார். மீண்டும் அந்த பறவையை என்றாவது ஒரு நாள் பார்ப்பேன் '' என்று கூறப்பட்டிருந்தது.

ஷிவாவின் இந்த பதிவை 3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments