இந்தியாவில் ஒரே நாளில் 279 பேர் பலி..!

0 1264

நாடு முழுவதும் மேலும் 9 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டில் ஊரடங்கு 5ம் கட்டமாக நீட்டிப்பு செய்யப்பட்டு, தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 9 ஆயிரத்து 985 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 279 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 76 ஆயிரத்து 583ஆகவும், கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 745ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரத்து 632 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலையில், 1 லட்சத்து 35 ஆயிரத்து 206 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் கொரோனா மையமாக திகழும் மகாராஷ்டிராவில் அத்தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. அத்தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் அந்த மாநிலத்தில் 3 ஆயிரத்து 289ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆயிரத்தையும், டெல்லியில் 31 ஆயிரத்தையும், குஜராத்தில் 21 ஆயிரத்தையும், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேச மாநிலங்களில் 11 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இதேபோல் மற்ற மாநிலங்களிலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments