சித்துவேலைகள் மூலம் மக்களை ஏமாற்றி வந்த கேண்டி பாபா கைது

0 1114

ஹரியானாவில் பண மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் கேண்டி பாபா கைது செய்யப்பட்டார்.

குருச்சேத்திரா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், தனக்கு அதிசய சக்திகள் இருப்பதாகவும், தான் பெரும் அவதாரம் என்று கூறி மேஜிக் வேலைகள் மூலம் மக்களை மயக்கிவைத்திருந்தார். இதனால் அப்பகுதி மக்கள் ராஜேஷை, கேண்டி பாபா என்று அழைத்து வந்தனர். இவர் செய்யும் சித்து விளையாட்டுக்களை உண்மையென நம்பியோர் ஏராளமாக இருந்தனர்.

இந்த நிலையில் பணத்தை இரட்டிப்பாக்குவதாகக் கூறி ஏராளமான மக்களிடம் மோசடி செய்ததாக ஃபரிதாபாத் போலீசாரிடம் புகார் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலிச் சாமியார் கேண்டி பாபாவை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments