மலைப்பகுதியில் போரிடுவதில் உலகிலேயே இந்திய ராணுவம் மிகவும் அனுபவம் வாய்ந்தது-சீன ராணுவ நிபுணர்

0 5724

மலைப்பகுதியில் போரிடுவதில் உலகிலேயே இந்திய ராணுவம் மிகவும் அனுபவம் வாய்ந்தது என சீன ராணுவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்டன் வெப்பனரி (Modern Weaponry) என்ற இதழின் ஆசிரியர் ஹூவாங் குவாஸி எழுதியுள்ள கட்டுரையில், உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த துருப்புக்களை இந்தியா கொண்டுள்ளதாக  குறிப்பிட்டுள்ளார்.

மலையேறுதல் என்பது ஒவ்வொரு இந்திய ராணுவ வீரருக்கும் தனிப்பட்ட திறமையை வளர்ப்பதாகவும், பீடபூமி மற்றும் மலைப்பகுதியில் போரிடும் அனுபவம் வாய்ந்த நாடு அமெரிக்காவோ, ரஷ்யாவோ அல்லது வேறு எந்த ஐரோப்பிய நாடோ அல்ல என்று குறிப்பிட்டுள்ள ஹூவாங் அந்தத் திறமை இந்திய ராணுவத்திற்கே உண்டு எனக் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments