துப்பாக்கிச் சண்டையில் பதுங்கியிருந்த 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

0 2017

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சோபியான் மாவட்டம் ரெபானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 5 பயங்கரவாதிகளும், பிஞ்சுராவில் கடந்த திங்கள்கிழமை 4 பயங்கரவாதிகளும்  துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர்.

இதேபோல் சோபியான் மாவட்டம் சுகு பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாலையிலேயே அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தபோது இருதரப்புக்கும் இடையே சண்டை வெடித்தது.

இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் தரப்பில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இன்று கொல்லப்பட்ட 5 பேரையும் சேர்த்து கடந்த 4 நாள்களில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments