ஒரே நாளில் 4,763 பேர் கொரோனாவுக்கு பலி..!

0 3430

சர்வதேச அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73லட்சத்து 16ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில், நோய்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்து 13 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், ஒரு லட்சத்து 17ஆயிரம் பேருக்கு புதிதாக நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 4ஆயிரத்து 763 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்றின் பாதிப்பை பொறுத்தவரை, மொத்தமாக அமெரிக்காவில் 20 லட்சத்து 45ஆயிரம் பேரும், பிரேசிலில் 7 லட்சம் பேரும், ரஷ்யாவில் 4 லட்சம் பேரும், இந்தியா, லண்டன், இத்தாலி நாடுகளில் 2லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பிரேசிலில் ஆயிரத்து 185 பேரும், அமெரிக்காவில் ஆயிரத்து 93 பேரும், லண்டனில் 286 பேரும், இந்தியாவில் 277 பேரும் பலியாகியுள்ளனர்.அதேசமயம், வைரஸ் பாதிப்பில் இருந்து தற்போதுவரை 36 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments