கொரோனா சிகிச்சைக்காக படுக்கை வசதிகள் தொடர்ந்து அதிகரிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1057

கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தொடர்ந்து படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் சிகிச்சை வசதியில்லை என மக்கள் அச்சப்படத் தேவை இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை துறைமுகத்தில் port old மருத்துவமனையில் 300 படுக்கை வசதிகளும், எழும்பூர் கண் மருத்துவமனையில் புதிதாக 300 படுக்கை வசதிகளும், கிங் இன்ஸ்டியூட் கிண்டி வளாகத்தில் அதிக ஆபத்துள்ள   நோயாளிகளுக்காக 500 அதி நவீன படுக்கை வசதிகளும் ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

தற்போது வரை சென்னையில் 4900 படுக்கைகள் மீதம் உள்ளது எனவும், தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது எனவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments