தமிழ்நாட்டில் இன்று 1,685 பேருக்கு கொரோனா உறுதி

0 4297

தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 1685 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. மேலும் 1685 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

அவர்களில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 36 பேரும் அடங்குவர். டெல்லியில் இருந்து வந்த 17 பேருக்கும், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 6 பேருக்கும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குவைத், சவுதி அரேபியாவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் திரும்பிய 4 பேருக்கும், மாலத்தீவில் இருந்து கப்பல் மூலம் வந்த ஒருவருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத விதமான ஒரே நாளில் 21 பேரின் உயிரை கொரோனா பறித்துள்ளதால், தமிழ்நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 300ஐ தாண்டியது. சென்னை மட்டும் மொத்தம் 244 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இதுவரை தலா 15 பேரும் வைரஸ் தொற்றால் பலியாகி உள்ளனர்.

77 ஆய்வகங்கள் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 13 ஆயிரத்து 219 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. கொரோனாவின் பிடியில் இருந்து மேலும் 798 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ளது. 16,279 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் யாருக்கும் புதிதாக வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை.

12 வயதுக்கு உட்பட்டவர்களில் இதுவரை 1839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 வயது முதல் 60 வயது வரையிலானவர்களில் மொத்தம் 29,260 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரை 3815 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments