கொரோனா பாதிப்பால் போராடும் திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனுக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் மருத்துவ உதவி...

0 8342
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன். கடந்த சில நாள்களாகவே கவலைக்கிடமாக இருக்கும் ஜெ.அன்பழகனுக்கு ஹைதராபாத்திலிருந்து மருந்துகளை வாங்கி அனுப்பிவைத்திருக்கிறார் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

ஜூன் 2 - ம்  தேதி நடந்த மருத்துவ பரிசோதனையில் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து  குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஜெ.அன்பழகன். நோய்த் தொற்றால் அவரது உடல் நிலை கவலைக்கிடமானதால் 3 - ம் தேதியிலிருந்து வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு 80 % க்கும் அதிகமான ஆக்சிஜன் செயற்கை சுவாசம் முறையிலேயே அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற ஜெ.அன்பழகனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.  

அதன் பிறகு கடந்த சில நாள்களாக மீண்டும் அவரது உடல் நிலையில் தொய்வு ஏற்பட்டு சிறுநீரகம் மற்றும் இதயத்தின் செயல்பாடுகள் மோசமடைந்தன. இந்த நிலையில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய தெலுங்கானா கவர்னருமான தமிழிசை சௌந்தர்ராஜன் ஹைதராபாத்திலிருந்து கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி அனுப்பி வைத்திருக்கிறார். தெலுங்கானா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு  ரெம்டெசிவிர் மருந்துகள் தான் சிகிச்சைக்காகக் கொடுக்கப்படுகிறது.  ரெம்டெசிவிர் மருந்தை உட்கொண்டால் குணமாகும் வேகம் 31 % அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஜப்பான் நாடும்  ரெம்டெசிவிர் கோவிட் 19 எனும் மருந்தையே கொரோனோ சிகிச்சைக்காக பயன்படுத்துகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments