கொரோனா உறுதியானவர்கள் ஆம்புலன்ஸ் சேவைக்கு பிரத்யேக உதவி எண் அறிவிப்பு

0 1626

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் சேவையை பெற பிரத்யேக உதவி எண்ணை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னையில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் அழைப்பை ஏற்று அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை விரைந்து அனுப்ப ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையும், கூடுதல் ஆம்புலன்ஸ் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று பாதிகப்பட்டவர்கள் உடனடி ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதற்கு 044-40067108 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments