11,000 களப்பணியாளர்கள் சென்னையில் வீடு வீடாக கணக்கெடுப்பு : அமைச்சர் ஜெயக்குமார்

0 1417

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 11 ஆயிரம் களப்பணியாளர்கள் சென்னை முழுவதும் வீடு வீடாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டத்தை வைத்து மட்டுமே மக்களை அச்சுறுத்த முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர், தொற்று ஏற்படாமல் இருக்க மக்களிடம் மனமாற்றம் வர வேண்டும் என்றார்.

மக்களின் எண்ணம் மற்றும் கருத்துகளுக்கு மதிப்பளித்தே 10 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், யாருடைய நிர்பந்தத்திற்காகவும் ரத்து செய்யப்படவில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments