'குடியுரிமை சட்டத்தை எதிர்த்ததால் மம்தா அரசியல் அனாதை ஆவார்!'- அமித்ஷா ஆவேச பேச்சு

0 2983
அமித்ஷா, மம்தா பானர்ஜி

குடியுரிமை சட்டத்தை எதிர்த்ததால், மம்தா பானர்ஜியை மேற்கு வங்க மக்கள் அரசியல் அனாதை ஆக்குவார்கள் என்று அமித்ஷா பேசியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் 2021- ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் வெற்றியை குறி லைத்து சோசியல் மீடியா வழியாக 1000 கூட்டங்களை நடத்த பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது. சோசியல் மீடியா வழியாக இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்க மக்களிடத்தில்  உரையாற்றினார். அவரின் உரையை  3 லட்சம் மக்கள் கண்டு களித்தனர். அமித்ஷா பேசுகையில், '' , மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி மிகவும் பாப்புலராகியுள்ளார். கடந்த 2014- ம் ஆண்டு முதல்  தற்போது வரை மேற்கு வங்கத்தில் 100 பாரதிய ஜனதா தொண்டர்கள் அரசியல் காரணங்களுக்காக கொல்லப்பட்டுள்ளனர். இறந்ததவர்களின் குடும்பத்தாருக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது மம்தா பானர்ஜிதான். பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் இன்சூரன்ஸ் திட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மம்தா தடையாக இருக்கிறார்.மதுவா இன மக்கள் மேற்கு வங்கத்திலிருந்து அகதிகளாக இந்தியாவுக்குள் நுழைந்த இந்து மக்கன். அவர்களுக்கு குடியுரிமை வழங்கினால் மம்தாவுக்கு என்ன பிரச்னை?தேர்தல் வரட்டும் , மேற்கு வங்க மக்கள் மம்தாவை அரசியல் ஆனாதை ஆக்குவார்கள்.நாட்டில், இனரீதியாக அரசியல்ரீதியாக மோதல்கள் மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும்தான் நடந்து வருகிறது. இது போன்ற சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

அரசியல் விரிவாக்கத்துக்காக நாங்கள் மேற்கு வங்கத்தை குறி வைத்து இயங்கவில்லை. இந்த மாநிலத்தை 'கோல்டன் 'மேற்குவங்கமாக மாற்றுவதே எங்கள் இலக்கு. கடந்த பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நாடு முழுவதும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதை காட்டிலும் மேற்கு வங்கத்தில் வென்ற 18 மக்க்ளவை  தொகுதிகள் மிக முக்கியமானது'' என்று பேசினார்.

2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் 18  தொகுதிகளை பாரதிய ஜனதா  கைப்பற்றியது. மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 22 தொகுதிகள் கிடைத்தது. மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்தை மம்தா தகர்த்தார்  இப்போது, மம்தாவை பதவியிலிருந்து இறக்கி விட்டு ஆட்சிக்கட்டிலில் அமர பாரதிய ஜனதா கட்சிய முயல்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments