மத்திய பிரதேசத்தில் 12ம் வகுப்புக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் தொடக்கம்

0 674

மத்திய பிரதேசத்தில் 12ம் வகுப்புக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அப்போது மத்திய பிரதேச மாநிலத்தில் 12ம் வகுப்புக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அரசு அனுமதியைத் தொடர்ந்து இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளன.

தேர்வு மையங்களுக்கு வரும் மாணாக்கர்களுக்கு கொரோனா பரவாமல் இருக்க  சானிடைசர் வழங்கி கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதேபோல் உடல் வெப்ப அளவும் பரிசோதிக்கப்பட்டது. இதையடுத்து மாணாக்கர்கள், தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் போதிய இடைவெளிவிட்டு  அமர்ந்து தேர்வு மையங்களில் மாணாக்கர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments