பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு..!

0 3637

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் இன்று உயர்ந்துள்ளது.

சுமார் 84 நாள்களாக பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைக்கும் நடவடிக்கையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருந்தன. கடந்த 2 நாள்களாக அந்நடவடிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் தொடங்கியுள்ளதால் விலை உயர்ந்து வருகிறது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 54 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 58 காசுகளும் உயர்ந்துள்ளது.

இதனால்  பெட்ரோல் விலை லிட்டர் 73 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டர் 71 ரூபாய் 17 காசாகவும் அதிகரித்துள்ளது. இதேபோல் சென்னையிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 48 காசுகள் உயர்ந்து  77 ரூபாய் 8 காசாகவும், டீசல் விலை 49 காசுகள் உயர்ந்து 69 ரூபாய் 74 காசாகவும் உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments