புதிய மின்னணு துப்பாக்கிகளை சோதித்துப் பார்க்க அமெரிக்கா முடிவு

0 1021

புதிதாகத் தயாரிக்கப்பட்ட மின்னணு துப்பாக்கியை சிரியாவில் பயன்படுத்திப் பார்க்க அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது.

லினக்ஸ் மென்பொருள் மூலம் இயங்கும் இந்தத் துப்பாக்கியில் குறிப்பிட்ட நபரைத் துல்லியமாகத் தாக்கும் வசதி உள்ளது. எதிரில் இருப்பவர் ஆயுதம் ஏதும் வைத்திருந்தால் மட்டுமே இந்தத் துப்பாக்கியால் சுட முடியும். அவ்வாறு ஆயுதம் இல்லாதவர்களை சுடவேண்டும் என நினைத்தாலும் அதற்கு துப்பாக்கியில் உள்ள சிறிய கணினி ஒத்துழைப்பு வழங்காது .

SMASH 2000 என அழைக்கப்படும் இந்தவகைத் துப்பாக்கிகளை, தாக்குதல் அதிகம் நடக்கும் சிரியாவின் அல் டான்ஃப் ராணுவத்தளப் பகுதிகளில் பரீட்சார்த்த முறையில் சோதனை செய்ய அமெரிக்க ராணுவம் முடிவு செய்துள்ளது. இந்தத் துப்பாக்கிகள் மூலம் நிராயுதபாணிகள் கொல்லப்படுவது தவிர்க்கப்படும் என அமெரிக்க ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments