நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10சதவீதம் ஒதுக்கீடு ?

0 799

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் அதிக அளவில் சேர முடியாத காரணம் குறித்து ஆராய கடந்த மார்ச் மாதம் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறைச் செயலாளர்கள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவை தமிழக அரசு அமைத்தது. பல்வேறு தரப்பினரிடம் ஆய்வு செய்த இந்தக் குழு தமது அறிக்கையை அளித்தது.

அரசுப் பள்ளி மாணவர்களில் 85 சதவீதம் பேர் தினக்கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் என்ற நிலையில் சுற்றுச்சூழல், பெற்றோரின் கல்வி, வருமானம், கிராமப்புறங்களில் பள்ளிகளின் இருப்பிடம், உளவியல் தடைகள் மற்றும் கிராமப்புறங்களில் தனியார் பயிற்சி மையங்கள் இன்மை உள்ளிட்ட பல காரணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு மருத்துவ இடங்களைப் பெற்றவர்களில் 66 சதவீதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தோல்வியடைந்த பின் வெற்றி பெற்றவர்கள் என்பதும் சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பாடத் திட்ட மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. இவற்றின் அடிப்படையில் அரசுப்  பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் என அந்தக் குழு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments