உலக நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,157 பேர் பலி

0 1430

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 லட்சத்தை நெருங்குகிற நிலையில், பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 4 லட்சத்து 8 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல்வேறு நாடுகளில் வைரஸ் பாதிப்புக்கு மூவாயிரத்து 157 பேர் பலியாகியுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2-வது இடத்திலும் உள்ளன. உயிரிழப்பை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் அதிகபட்சமாக 813 பேரும், அமெரிக்காவில் 586 பேரும்,  இந்தியாவில் 266 பேரும் பலியாகியுள்ளனர்.

நோய்த்தொற்றின் பாதிப்பை பொறுத்தவரை, அமெரிக்காவில் 20 லட்சத்து 26 ஆயிரம் பேரும், பிரேசிலில் 7 லட்சம் பேரும், ரஷ்யாவில் 4 லட்சம் பேரும், இந்தியா, லண்டன் ஆகிய நாடுகளில் 2லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், வைரஸ் பாதிப்பில் இருந்து தற்போதுவரை 35 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments