அம்பன் புயல்: மேற்கு வங்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று

0 438

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிக்குச் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அம்பன் புயல் காரணமாக மேற்கு வங்கத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதையடுத்து ஒடிசாவின் கட்டாக் நகரில் இருந்த தேசியப் பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 173 வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர்.

இவர்களில் 49 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக என் டி ஆர் எஃப் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பாதிப்புக்குள்ளான வீரர்கள் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments