தென்கொரியாவுக்கு எதிரி நாட்டுக்குரிய அந்தஸ்து - பங்காளி மீது வடகொரியா திடீர் பாய்ச்சல்

0 8582
தென்கொரிய பிரதமர் மூன் ஜே இன் உடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்

இந்தியாவுக்கு எப்படி சீனா தொந்தரவு கொடுத்து வருகிறதோ அதே போல, தென்கொரியாவுக்கு வட கொரியா தொந்தரவு கொடுத்து வருகிறது. கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் கூட லடாக் பகுதியில் சீனா தன் ஆக்கிரமைப்பை நிலை நாட்ட முயன்று மூக்குடைப்பட்டது . சீனாவை போல வடகொரியாவும் தன் பங்காளி நாடானா தென்கொரியாக்கு கொரோனா பேரிடர் காலத்தில் அரசியல்ரீதியாக நெருக்கடியை கொடுத்து வருகிறது. தென்கொரியாவுடன் அனைத்துவிதமான உறவையும் துண்டிக்க வடகொரியா முடிவெடுத்துள்ளதாக அந்த நாட்டு அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

மேலும் கே.சி.என்.ஏ வெளியிட்டுள்ள செய்தியில் '' வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவரின் சகோதரி கிம் யோ ஜாங் மற்றும் ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய குழ துணைத் தலைவர் கிம் யோங் சோல் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் தென்கொரியா பற்றிய முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் தென்கொரியா நாட்டுக்கு ஒரு எதிரி நாட்டு அந்தஸத கொடுக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்து.தென் கொரிய அதிகாரிகளின் தரோகம் மற்றும் தந்திரமான நடத்தையால் வடகொரிய மக்கள் கோபமடைந்துள்ளனர், வடகெரியாவின் உச்ச தலைமையின் மாண்பை காப்பாற்றும் வகையில் தென்கொரியா நடந்த கொள்ளவில்லை. இனிமேல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த எதுவுமே இல்லை'' என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே தென்கொரியாவுடன் அனைத்து உறவுகளையும் துண்டிப்போம்:, எல்லையை மூடிவிடுவோம் என்று வடகொரியா மிரட்டி வந்தது. வடகொரியா தென் கொரியாவுடன் உறவை துண்டிப்பதன் முதல் கட்ட அடையாளமாக இரு நாட்டு ராணுவம், மற்றும் வடகெரியா அதிபர், தென்கொரிய பிரதமர் அலுவலகத்துக்கிடையே இருந்த ஹாட்லைன் இணைப்புகள் இன்று துண்டிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாக தென்கொரியாவிலிருந்து முதன்முதலில் செய்திகள் வெளியானது. இதையடுத்து, வடகொரிய அதிபருக்கு தென்கொரியா மீது கோபம் உருவாயிகிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments