ஒரு வருட சம்பளத்தை சேமித்து என் தந்தை அமெரிக்கா அனுப்பினார் ! நாள் ஒன்றுக்கு ரூ. 6 கோடி சம்பளம் வாங்கும் சுந்தர்‘பிச்சையின் ஃபிளாஸ்பேக்

0 66347
சுந்தர்பிச்சை

தமிழகக்தைச் சேர்ந்த சுந்தர்பிச்சை உலகின் முன்னணி நிறுவனங்களுல் ஒன்றான கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைவராக உள்ளார். சுந்தர்பிச்சையின் ஆண்டு சம்பளம் இந்திய மதிப்பில் ஆண்டுக்கு ரூ. 2,145 கோடி ஆகும். நாள் ஒன்றுக்கு ரூ. 6 கோடி சம்பளமாக பெறுகிறார்.

2019- ம் ஆண்டு உலகிலேயே அதிக சம்பளம் வாங்கியவர் என்ற பெருமையும் சுந்தர் பிச்சைக்கு உண்டு. 'கூகுள்பிச்சை 'என்று செல்லமாக அழைக்கப்படும் சுந்தர் பிச்சை சென்னையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த்வர்

சுந்தர்பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை, ஜெனரல் எலக்ட்ரிக்  நிறுவனத்தில் வேலை பார்த்தார். சென்னையில், இரு அறைகளைக் கொண்ட வீட்டில் வசித்து வந்தனர். சுந்தர் பிச்சையின் வீட்டில் சொந்தமாக டிவி, கூட இருந்ததில்லை. ஆனால், தன் மகனின் படிப்பில் மட்டும் ரகுநாத பிச்சை அதிக கவனத்துடன் இருந்தார். தந்தையின் இந்த கவனமே சுந்தர்பிச்சையை உலகின் உச்சாணிக் கொம்பில் அமர வைத்துள்ளது. தன்னை உருவாக்க தன் தந்தை பட்ட கஷ்டங்களை வருங்கால தலைமுறையிடம் சுந்தர்பிச்சை நேற்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் பட்டம் படிப்பு முடித்து செல்லும் பட்டதாரிகளுக்கு பிரிவுசார விழா யுடியூ ப் வழியாக நடைபெற்றது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப , பாடகி லேடி காகா உள்ளட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சுந்தர்பிச்சை, '' மாணவர்களே இந்த தருணத்தில் உங்கள் எதிர்கால திட்டம், லேலை வாய்ப்பு போன்றவற்றை இழந்து விட்டதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம்பிக்கையுடன் காத்திருங்கள், பொறுமையை இழந்து விடாதீர்கள். அனைத்தையும் மாற்றக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். 1920- ம் ஆண்டு உலகையே 'புளு' காய்ச்சல் புரட்டிப் போட்டது. இது போன்ற பல இக்கட்டான காலக்கட்டங்களில் லட்சக்கணக்கான மாணவ்ர்கள் பட்டம் முடித்து வெளியே சென்றுள்ளனர்.

பிரச்னைகளை சமாளித்துதான் அவர்கள் முன்னேறியுள்ளனர். வரலாறு அதைத்தான் நமக்கு கற்று தந்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நான் ஸ்டேன்ஃபோர்ட் பல்கலையில் ஒரு படிப்பை படிக்க என் தந்தை ஓராண்டு கால்மாக தன்  சம்பளத்தை சேமித்தார். அந்த பணத்தில்தான் விமான டிக்கெட் எடுத்து என்னை வழியனுப்பி  வைத்தார். என் முதல் விமானப்பயணமும் அதுதான். தொழில் நுட்பத்தில் எனக்கு இருந்த ஆர்வம் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்துள்ளது. எனக்கு கிடைக்காத தொழில்நுட்ப வசதிகள் தற்போது, உங்களுக்கு கிடைத்துள்ளது.. எனவே, பொறுமையுடன் இருங்கள் நம்பிக்கையை இழக்க வேண்டாம். இருண்ட காலம் மாறும்'' என்று பேசியுள்ளார்.

சுந்தர்பிச்சையின் தன் தந்தை குறித்த பேச்சு, இந்த இக்கட்டான சூழலில் மாணவ - மாணவிகளிடத்தில் பெரிய நம்பிக்கையை விதைப்பதாக இருந்தது. தற்போது, 47 வயதான சுந்தர்பிச்சை காரக்பூர் ஐ.ஐ.டியில் metallurgical engineering படித்தார். பின்னர், ஸ்டேன்ஃபோர்ட் பல்கலையில் படிக்க அவருக்க ஸ்காலர்ஷிப் கிடைத்தது- 2004- ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார். கூகுள் குரோம் மற்றும் குரோம் ஓ.எஸ் உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பகளுக்கு இவர் தான் அடித்தளமாக இருந்தார். 2015- ம் ஆண்டு அவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். பின்னர், கூகுள் பேரன்ட் நிறுவனமான ஆல்ஃபாபெட்டின் தலைவரானார். சுந்தர்பிச்சையின் முழு பெயர் பிச்சை சுந்தர்ராஜன் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments