பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாகித் அப்பாஸிக்கு கொரோனா தொற்று

0 433

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் ஷாகித் அப்பாஸி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

நவாஸ் ஷெரீப் கட்சியைச் சேர்ந்த அப்பாஸி, நவாஸ் ஷெரீப் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2017-2018ம் ஆண்டில் பாகிஸ்தானில் பிரதமராக இருந்தார். இந்நிலையில் அவர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவருடன் தற்போதைய ரயில்வே துறை அமைச்சர் ஷேக் ரஷித் அகமதுவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments