நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.2 சதவிகிதமாக குறையும்-உலக வங்கி

0 549

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3 புள்ளி 2 விழுக்காடு என்ற நிலைக்கு சுருங்கி விடும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வங்கி விடுத்துள்ள கருத்துருவில், கொரோனா பாதிப்பு மற்றும் பொதுமுடக்கம் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அடுத்த ஆண்டில் பொருளாதார நிலைமை சீராகலாம் என்றும் உலக வங்கி கூறியுள்ளது. கடந்த நிதியாண்டில், இந்தியப் பொருளாதாரம் 4 புள்ளி 2 விழுக்காடாக இருக்கும் என்று உலக வங்கி ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது நிலைமை மேலும் மோசமாகும் என்று தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments