ஐரோப்பாவில் நிலைமை முன்னேற்றம் - WHO கருத்து

0 766

உலக அளவில் கொரோனாவின் தீவிரம் மோசமடைந்து வரும் நிலையில் ஐரோப்பாவில் நிலைமை முன்னேறி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

காணொலி மூலம் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் அதனோம் ஜெப்ரயேசஸ், (Adhanom Ghebreyesus) உலக அளவில் ஒட்டுமொத்தமாக 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த 9 நாட்களாக உலக அளவில் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக ஒரு லட்சத்து 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.பலநாடுகளில் கொரோனா பாதிப்பில்லாத சூழல் தென்பட்ட போதும் மீண்டுவிட்டதாகக் கருதி தன்னிறைவு உணர்வு கொள்ளாமல், கண்காணிப்பையும் பரிசோதனையையும் தீவிரப்படுத்துவதே கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க வழி என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments