காஷ்மீரில் இந்த ஆண்டு 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்-பாதுகாப்புப் படை அதிகாரிகள்

0 944

காஷ்மீரில் இந்த ஆண்டு 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

சோஃபியான் மாவட்டத்துக்குட்பட்ட பிஞ்சோரா என்ற இடத்தில் நேற்று காலை 4 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். அவர்களுடன் சேர்த்து இந்த ஆண்டு கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 29 வீரர்கள் வீரமரணம் அடைந்ததாகவும், அப்பாவி பொதுமக்கள் 11 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீரில் தெற்குப் பகுதி மாவட்டங்களில் 100 உள்ளூர் தீவிரவாதிகளையும் 25 வெளிநாட்டுத் திவிரவாதிகளையும் ஒடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments